அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளை விடுவித்து, புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கி அதனுடன் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்க தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரிகளின் இந்த முடிவு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.